திருச்சி: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், கவிஞருமான நந்தலாலா நேற்றுமுன்தினம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கருமண்டபத்தில் உள்ள அவரது இல்லத்தில் கவிஞர் நந்தலாலா உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் துணை முதல்வர்அளித்த பேட்டியில், ‘கவிஞர் நந்தலாலா பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் மீது மிகுந்த பற்று கொண்டவர். அவரது மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு திமுக சார்பாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
The post கவிஞர் நந்தலாலா உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி appeared first on Dinakaran.