டெல் அவிவ்: காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் பிணையக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், நாளை (ஞாயிறு) முதல் ஹமாஸ் தரப்பு பிணைக் கைதிகளை விடுவிப்பதும் அதற்கு மாற்றாக சிறைகளில் இருந்து பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிப்பதும் நிகழவிருக்கிறது. இருப்பினும் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே அமைந்துள்ளது.
3 கட்டங்களாக.. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் முதல் ஆறு வாரம் இரு தரப்பினரும் ‘அமைதியாக’ இருக்க வேண்டும் என்று கத்தார் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.