புதுடெல்லி: பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 1 மற்றும் 2 நிகழ்ச்சிகள் கடந்த 2022, 2023-ம் ஆண்டுகளில் சிறப்பாக நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக 3-வது ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் 3.0, பிப்ரவரி 15 முதல் 24 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்த செய்தி முன்கூட்டியே ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ஜனவரி 8-ல் வெளியானது. இந்நிலையில், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் மூலக்கருத்தாக “அகத்திய முனி” இடம்பெறுவார் என்று தெரிவித்தார்.