லாஸ் ஏஞ்சல்ஸ்: காட்டுத்தீயால் கதிகலங்கி போன லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 2025 ஆம் ஆண்டிற்கான கிராமி விருது வழங்கும் விழா வண்ணமயமாக நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டிற்கான 67வது கிராமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. காட்டுத்தீயால் தலைப்பு செய்திகளில் இடம்பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமே உலக இசைக்கலைஞர்களால் மீண்டும் முக்கியத்துவம் பெற்றது. இசைக்கு அங்கீகாரம் அளிக்கும் உலக மேடை என்பதால் உலகம் முழுவதிலும் இருந்து விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட கலைஞர்கள் கண்களை கொள்ளைகொள்ளும் அலங்காரத்துடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
சிறந்த கோரஸ் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட தாட்பாஸ் சிறந்த கிளாசிக்கல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட ஹிலா பீல்ட்மேனிடம் முழங்காலிட்டு தனது காதலை வெளிப்படுத்தி சிவப்பு கம்பள வரவேற்பை காதல் மேடையாக்கினார். விழாவின் போது லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயிலிருந்து மக்களை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். உலகளவில் வேறு எவரும் சாதிக்காத வகையில் 32 கிராமி விருதுகளை குவித்த பியான்சிக்கு இந்த ஆண்டு சிறந்த ஆல்பத்திற்கான கிராமி விருதை உச்சி நுகரும் வாய்ப்பு கிடைத்தது. கொவ் பாய் கார்ட்டர் என்ற நாட்டுப்புற ஆல்பத்திற்காக சிறந்த விருதை தட்டி சென்றார். சிறந்த ராப் ஆல்பம் விருதை அலிகெட்டர் பைட்ஸ் நெவெர் என்ற ஆல்பத்திற்காக டோஷி வென்றார்.
ஆனந்த கண்ணீருடன் மேடையேறிய அவர் தன்னை போன்ற கறுப்பினத்தை சேர்ந்த எவராலும் எதையும் சாதிக்கமுடியும் என்று கூறினார். பிங்க் போனிக் கிளப் என்ற பாடலுக்காக சிறந்த அறிமுக கலைஞர் விருதை வென்ற ஷேப்ல் ரோ இசை கலைஞர்களுக்கு இசை நிறுவனங்கள் உரிய ஊதியம், மருத்துவ காப்பீடு அலங்க வேண்டும் என்றார். சிறந்த லத்தீன் பாப் ஆல்பம் விருதை ஷகீராவும், சிறந்த குரூப் பாப் ஆல்பம் விருதை லேடி காகவும் பெற்றனர். சென்னையை பூர்விகமாக கொண்ட அமெரிக்க வாழ் இந்தியரான சந்திரிக்கா டாண்டன் திரிவேணி என்ற இசை ஆல்பத்திற்காக கிராமி விருதை பெற்றார். ரெக்கார்டிங் அகாடமியில் உறுப்பினர்களாக இருக்கும் சுமார் 13 ஆயிரம் பேர் இணைந்து கிராமி விருத்தாளர்களை தேர்வு செய்தனர்.
The post காட்டுத்தீயால் கதிகலங்கிய லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வண்ணமயமான கிராமி விருது வழங்கும் விழா..!! appeared first on Dinakaran.