சென்னை: காணும் பொங்கலன்று அளிக்கப்படும் அரசு விடுமுறையை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைப்போம் என பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காணும் பொங்கலன்று மெரினா கடற்கரை குப்பை கூளமாக மாறுவதற்கு மக்கள்தான் காரணம். அன்றைய தினம் அரசு விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரைப்போம்.
தமிழகத்தில் தை மாதம் முதல் நாள் (14–ந் தேதி) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து மாட்டுப் பொங்கல் (15–ந் தேதி), காணும் பொங்கல் (16–ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து 17-–ந் தேதி பொது விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. 18-ம் தேதி சனிகிழமை, 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என வாரம் முழுவதும் விடுமுறையாக உள்ளது.
பொங்கல் திருநாள் என்பது தமிழகம் முழுவதும் சாதி, மத வேறுபாடுகள் கடந்து அனைவரும் கொண்டாடும் கலாச் சார விழாவாகும். இந்நிலையில் காணும் பொங்கலன்று பல்வேறு சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் மெரினா கடற்கரை முழுவதும் குப்பை கூளமாக மாறியது.
ஒவ்வொரு ஆண்டு காணும் பொங்கலுக்கு பிறகும் மெரினா கடற்கரை குப்பைகள் நிறைந்து காணப்படுவதும் வழக்கமாக உள்ளது. இவற்றை அப்புறப்படுத்த ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் மெனக்கெட வேண்டியுள்ளது. இந்த ஆண்டும் காணும் பொங்கலுக்கு மெரினாவில் மக்கள் குவிந்த நிலையில் அடுத்த நாள் கடற்கரையே குப்பைக்கூளமாக காட்சியளித்தது. இதுகுறித்து பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளதுடன் பசுமை தீர்பாயம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காணும் பொங்கலன்று அளிக்கப்படும் அரசு விடுமுறையை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைப்போம் என்றும் காணும் பொங்கலன்று மெரினா கடற்கரை குப்பை கூளமாக மாறுவதற்கு மக்கள்தான் காரணம் என்றும் அதனால் அன்றைய தினம் அரசு விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரைப்போம் என்று எச்சரித்துள்ளது.
The post “காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரைப்போம்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை. appeared first on Dinakaran.