“மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்யப்பட்டால் தமிழகத்திற்கு 8 மக்களவைத் தொகுதிகள் இழப்பு ஏற்படும்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய உரிமைக்குரல், இன்று தென்மாநில முதல்வர்களின் குரலாக மாறியுள்ளது. ‘தொகுதிகள் குறையாது’ என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி கொடுத்தாலும், தேசிய அரசியல் களத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான சூடு குறையவில்லை.
இந்த நிலையில், இப்பிரச்சினை தொடர்பாக திமுக தலைமைக் கழகச் செயலாளர் (செய்தி மற்றும் ஊடகத் தொடர்பு) பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும், பாஜக மாநிலச் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் எழுப்பிய கேள்விகளும், அதற்கான பதில்களும் தொகுப்பாக இங்கே… முதலில், கான்ஸ்டன்டைன் ரவீந்திரனின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் ஸ்ரீகாந்த் கருணேஷ்: