இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்திருப்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு, ஆபரேஷன் சிந்தூருக்கு பின்பு இந்தியாவுடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் அமெரிக்கா ஆற்றிய பங்கினை வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா பாகிஸ்தான் உறவு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிக்கையை பாகிஸ்தான் வரவேற்கிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆதரிப்பதில் அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகள் ஆற்றிய முக்கியமான பங்களிப்பை பாகிஸ்தான் பாராட்டுகிறது. இது பிராந்திய ஸ்திரத்தன்மையை பேணுவதற்கான ஒரு படியாகும்.