கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு 10 ஊராட்சி ஒன்றியங்களில் 197 ஏரிகள் நிரம்பின. நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் 977 ஏரிகள் நிரம்பவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, கடந்த 1 மற்றும் 2-ம் தேதியில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளியில் அதிகனமழையும், கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழையும் பெய்தது. இந்த மழையால், மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.