சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று நள்ளிரவு, தேவாலயங் களில் சிறப்பு ஆராதனை நடந்தது. இயேசு கிறிஸ்து பூமியில் மனிதராக பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். அந்த வகையில் கிறிஸ்துமஸ் இன்று (டிச.25) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நேற்று சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஏசுவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் ஆலயங்களிலும் ஆலயவளாகங்களிலும் வண்ண வண்ண நட்சத்திரங்கள் ஜொலித்தன. நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகளும், சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றன.