திருச்சி: திருச்சி உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் சிறுமி உட்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உறையூர் பணிக்கன் தெரு, மின்னப்பன் தெரு பகுதியில் வாந்தி, வயிற்றுப் போக்கு காரணமாக பிரியங்கா(4) என்ற சிறுமி மற்றும் 2 பெண்கள் என 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
மேலும், 17 பேர் அரசு மருத்துவமனையிலும், 10-க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீரில் கழிவுநீர் கலந்ததே இதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டி, அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.