ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘ஓஜி சம்பவம்’ பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் பாடலை ஆதிக் ரவிச்சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை விஷ்ணு எடவன் எழுதி உள்ளார். ‘திரை அரங்கம் செதறணும்… இவன் பேர் முழங்க கலக்கட்டும்…’ என இந்தப் பாடலின் வரிகள், அஜித் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.