குன்னூர்: குன்னூர் மலைப்பாதையில் நேற்றிரவு நேரங்களில் சாலையில் உலா வரும் காட்டுயானைகள், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டுமென வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். நீலகிரி மாவட்டம் மலையடிவாரப் பகுதிகளான மேட்டுப்பாளையம் பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக குட்டியுடன் 7 காட்டு யானைகள் கடந்த 23 நாட்களாக தேயிலை தோட்டம், குடியிருப்பு பகுதி மற்றும் பர்லியார், நஞ்சப்ப சத்திரம், காட்டேரி போன்ற பகுதிகளில் முகாமிட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்றிரவு குட்டிகள் உட்பட 7 காட்டு யானைகள் காட்டேரி பூங்கா அருகேயுள்ள லாஸ் நீர்வீழ்ச்சி பகுதியில் சாலையில் உலா வந்தது. இந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் யானைகள் சாலையில் உலா வருவதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக பயணம் மேற்கொள்ள வேண்டுமென்றும், முகப்பு விளக்குகள் எரியாத வாகனங்களில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
The post குன்னூரில் குட்டியுடன் 7 யானைகள் முகாம் appeared first on Dinakaran.