சென்னை: குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். குரூப் 1 தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 10,11,12,13 ஆகிய நாட்களில் நடைபெற்றது.
தமிழக அரசில் துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான போட்டித் தேர்வாக டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடைபெறுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு, முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டமாக நடைபெறும். .
2024-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 188 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 90 காலிப்பணியிடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்பட்டது. தற்போது இறுதி தரவரிசை பட்டியல் வெளியான நிலையில், கலந்தாய்வின் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கு நடத்தப்படும் கடினமான தேர்வுகளில் குரூப் 1 தேர்வு முதன்மையான இடத்தில் உள்ளது. இத்தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என மூன்று கட்டமாக நடைபெறும். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணலில் எடுக்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
2024-ம் ஆண்டு குரூப் 1 தேர்வு அறிவிப்பு 90 காலிப்பணியிடங்களுக்கு மார்ச் 28-ம் தேதி வெளியிடப்பட்டது. முதல்நிலை தேர்வு ஜூலை 13-ம் தேதி நடத்தப்பட்டது. இதேர்வை 1.59 லட்சம் பேர் எழுதினர். இதற்கான முடிவுகள் செப்டம்பர் 2-ம் தேதி வெளியானது. இதில் 1,988 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
குரூப் 1 முதன்மைத் தேர்வு டிசம்பர் 10 முதல் 13 வரை முதன்மைத் தேர்வு சென்னையில் நடைபெற்றது. இத்தேர்வை 1,888 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். இதற்கான முடிவுகள் மார்ச் 14-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 190 பேர் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு நேர்முகத் தேர்வு ஏப்ரல் 7 முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான இறுதி முடிவுகள், தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 627 மதிப்பெண்களுடன் கடலூரை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்துள்ளார். தற்போது இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், 90 காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட்டு, பணி நியமனம் வழங்கப்பட உள்ளது.
The post குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் appeared first on Dinakaran.