சென்னை: அரியலூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், தேனி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவற்காக தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உள்பட இரண்டு சமூகப்பணி உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பதவி அரசு பணி அல்ல.
அதேபோன்று கன்னியாகுமரி, கடலூர், கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, தூத்துக்குடி, வேலூர், நாமக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக் குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தை நல குழுவிற்கு ஒரு பெண் உள்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். விண்ணப்பங்களை வருகிற 28ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணத்தை https://dsdcpimms.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
The post குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.