ஹைதராபாத்: கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் சிக்கடப்பள்ளி போலீஸார் அனுப்பிய புதிய சம்மனை அடுத்து நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (டிச.24) மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜர் ஆகிறார். இது அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மத்தியில் கடும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் இது அரசியல் பழிவாங்கல் என ஆளும் காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
நடந்தது என்ன? அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக இந்தப் படம் சாதனை படைத்துள்ளது.