‘கேம் சேஞ்சர்’ படத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பு காரணமாக, தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு மீண்டுமொரு படம் பண்ண முடிவு செய்திருக்கிறார் ராம் சரண்.
தில் ராஜு தயாரிப்பில் ஷங்கர் தயாரிப்பில் வெளியான படம் ‘கேம் சேஞ்சர்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்விப் படமாக இது அமைந்தது. மேலும், முதல் நாள் வசூல் ரூ.186 கோடி என்று படக்குழு வெளியிட்ட போஸ்டரும் இணையத்தில் கடுமையாக கிண்டல் செய்யப்பட்டது. தெலுங்கு திரையுலகின் சமீபத்திய படங்களில் பெரும் நஷ்டத்தைக் கொடுத்த படம் என்ற பெயரை ‘கேம் சேஞ்சர்’ எடுத்துள்ளது.