சென்னை: கோட்டக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனம், கோட்டக் தங்கம் வெள்ளி பாசிவ் பண்ட் ஆப் பண்ட் (FoF) திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஓப்பன்-எண்டட் திட்டமான இது, கோட்டக் கோல்ட் ஈ.டி.எப். மற்றும் கோட்டக் சில்வர் ஈ.டி.எப். திட்டங்களில் முதலீடு செய்கிறது. இந்த புதுமையான திட்டம், நீண்டகால மூலதனப் பெருக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.