சென்னை: கனமழை காரணமாக வரத்து குறைவு மற்றும் சில்லரை வியாபாரிகள் வராததால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சரிந்தது. வணிகர் தினத்தை முன்னிட்டு நேற்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால் பூக்கள், பழ மார்க்கெட்டுகள் வழக்கம்போல் இயங்கின. காய்கறி மார்க்கெட் விடுமுறை என்பதால் சென்னை புறநகர் சில்லரை வியாபாரிகள் வருகை குறைந்து பூக்களின் விலை கடும் சரிவு ஏற்பட்டது. குறைந்த விலையில் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆனாலும் யாரும் வாங்க வராததால் விவசாயிகள், வியாபாரிகள் கவலை அடைந்தனர். ஒரு கிலோ மல்லி ரூ.500ல் இருந்து ரூ.250க்கும், ஐஸ் மல்லி ரூ.400ல் இருந்து ரூ.150க்கும் முல்லை மற்றும் ஜாதிமல்லி ரூ.400ல் இருந்து ரூ.200க்கும், கனகாம்பரம் ரூ.800ல் இருந்து ரூ.300க்கும், அரளி பூ ரூ.500ல் இருந்து ரூ.80க்கும், சாமந்தி ரூ.240ல் இருந்து ரூ.100க்கும், சம்பங்கி ரூ.200ல் இருந்து ரூ.30க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.180ல் இருந்து ரூ.60, பன்னீர்ரோஸ் ரூ.140ல் இருந்து ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டது.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை சரிவு appeared first on Dinakaran.