சென்னை: கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணியாற்றுவோரை நிரந்தரம் செய்ய வேண்டும் என திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியனின் சென்னை கோட்டத்துக்குட்பட்ட மதுரவாயல், விருகம்பாக்கம் கிளை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை, கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் நாகமுத்து தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் அணிச் செயலாளர் செந்தமிழ் செல்வி கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.