தேன்கனிக்கோட்டை, ஏப்.22: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே குன்றின் மீதுள்ள மாதேஸ்வரன் கோயில் திருவிழாவையொட்டி, நேற்று காலை 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு பூஜை செய்தனர். அப்போது, ஹோமத்திற்காக அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் இருந்து கிளம்பிய புகையால் அங்குள்ள மரத்தில் உள்ள தேன்கூடு கலைந்தது. தேனீக்கள் பறந்து வந்து கொட்டியதால் பக்தர்கள் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறியோடினர்.
இதில், உரிகம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி மாதேவன் (55) தேனீக்கள் கொட்டியதால் தடுமாறி விழுந்ததில் பலத்த அடிபட்டு உயிரிழந்தார். மேலும் 10க்கும் மேற்பட்டோர், தேனீக்கள் கொட்டியதில் படுகாயமடைந்தனர். இதில் நந்தீஷ்(32), வீரேஷ்(22), பீரோஷ்(20), தீபூ(22) ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
The post கோயில் திருவிழாவில் தேனீக்கள் கொட்டி ஒருவர் உயிரிழப்பு: 10 பேர் படுகாயம் appeared first on Dinakaran.