கோயில் – மசூதி மோதல்களுக்கு முடிவுகட்டுமாறு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறிய கருத்துக்கு சங்கராச்சாரியர்கள், மடாதிபதிகள் மற்றும் துறவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் கடந்த வாரம் புனே நகரில் பேசும்போது, "அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு கோயில் – மசூதி தொடர்பாக புதிய பிரச்சினைகளுக்கு இனி இடமில்லை. இதுபோன்ற பிரச்சினைகளை கிளப்பி சிலர் இந்துக்களின் தலைவர்களாக முயற்சிப்பதை ஏற்க முடியாது" என்றார்.