சாதி அடிப்படையிலான ஊர், தெரு, சாலையின் பெயர்களை மாற்றுவது குறித்த அரசாணை வெளியிட்ட மறுநாளே கோவையில் புதிய பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. பாலம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கும் வந்துவிட்டது. ஆனாலும், அதன் பெயரால் உருவான சர்ச்சை இன்னும் நீடிக்கிறது.