செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதியில் விராட் கோலியின் அற்புதமான சேஸிங்கில் ஸ்ரேயாஸ் ஐயருடன் சேர்ந்து அடித்தளம் அமைத்துக் கொடுக்க இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிக்குள் சென்றது. ஆனால், ஆஸ்திரேலியா பேட் செய்த போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சக இந்திய வீரர் மீது வசைமாறி பொழிந்தது நெட்டிசன்கள் மத்தியில் அவ்வளவு நல்ல வரவேற்பைப் பெறவில்லை.
32-வது ஓவரில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், குல்தீப் யாதவ் வீசிய பந்தை மிட்விக்கெட்டில் பிளிக் செய்து விட்டு ஒரு ரன் ஓடினார், அது ஒரு ரன் தான். டீப் மிட்விக்கெட்டில் பந்தை எடுத்த விராட் கோலி நேராக குல்தீப் யாதவுக்கு பவுலர் முனையில் த்ரோ செய்தார். பந்து ஸ்டம்பைத் தாக்கலாம் என்று தவறாகக் கணித்த குல்தீப் பந்தை பிடிக்காமல் விட அது அவரைத் தாண்டி நின்று கொண்டிருந்த கேப்டன் ரோஹித் சர்மாவிடம் சென்றது.