சசிகுமார் நாயகனாக நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ திரைப்படம் ஜூலை 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகுமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இதன் வசூல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதனை கணக்கில் கொண்டு சசிகுமார் நடிப்பில் வெளியாகாமல் இருக்கும் சில படங்கள் வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டு வருகின்றன.