காற்று மாசு, நீர் மாசு, சுற்றுச்சூழல் மாசு போன்ற பிரச்சினைகள் கவனிக்கப்படுவது போல் ஒலி மாசு பிரச்சினை போதுமான அளவில் கவனிக்கப்படுவதில்லை. சாலையில் செல்வோருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிக ஒலியுடன் ‘ஹாரன்’ எழுப்புவதை சிலர் வழக்கமாகவே கொண்டுள்ளனர்.
குறிப்பாக, பேருந்து ஓட்டுநர்களும் சில நேரங்களில் இது போன்று முகம்சுளிக்க வைக்கும் செயலில் ஈடுபடுவதைக் கவனிக்க முடிகிறது. இப்படி ‘ஹாரன்’ அடிக்கும் பேருந்து ஓட்டுநர்களுக்குத்தான் பாடம் புகட்டியுள்ளது கர்நாடக போக்குவரத்துத் துறை. சத்தமாக ‘ஹாரன்’ எழுப்பிய ஓட்டுநர்களைப் பிடித்து வாகனத்தின் அருகே நிற்கவைத்து, அதே ஒலியில் ‘ஹாரன்’ எழுப்பி அந்த சத்தம் ஏற்படுத்தும் எரிச்சலை அவர்களுக்கு உணர்த்தியுள்ளனர்.