சத்தியமங்கல: சத்தியமங்கலம் அருகே காருடன் கிணற்றுக்குள் விழுந்த விவசாயியை மீட்கச் சென்ற மீனவர் உயிரிழந்துள்ளார். முள்ளிக்காபாளையத்தைச் சேர்ந்த விவசாயி சிவகுமார், உறவினர் காரை பின்னோக்கி இயக்கியபோது கிணற்றுக்குள் விழுந்தது. பாதியளவு நீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்ட நிலையில், சிவகுமாரை மீட்க 4 மீனவர்கள் கிணற்றில் இறங்கினர். கிணற்றில் பெட்ரோல் வாடை அதிகம் இருந்ததால், மீட்கச் சென்ற மீனவர்களில் ஒருவர் மூச்சுதிணறி உயிரிழந்தார்.
The post சத்தியமங்கலம் அருகே காருடன் கிணற்றுக்குள் விழுந்த விவசாயியை மீட்கச் சென்ற மீனவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.