சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்து ஒருசில மணி நேரங்களில் புயலாக வலுப்பெறக்கூடும். இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ.30) பிற்பகல் காரைக்காலுக்கும் – மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும், என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: “தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்து ஒருசில மணி நேரங்களில் புயலாக வலுப்பெறக்கூடும். இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ.30) பிற்பகல் காரைக்காலுக்கும் – மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும்.