
அகில இந்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர், சிபிஐ(எம்) நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுகிற இச்சட்டம், உயர் கல்வியைத் தனியார்வசம் ஒப்படைப்பதாக அமையும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. இதனால், எளிய குடும்பங்களைச் சேர்ந்த – குறிப்பாகப் பட்டியல் சாதி / பழங்குடி, பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் உயர் கல்வி உரிமை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

