சீனாவின் விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்க புதிய விண்கலம் செலுத்தப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) மற்றும் பட்ச் வில்மோர் (Butch Wilmore) ஆகியோர் தொழில்நுட்பக் கோளாறுகளால் பல மாதங்கள் சிக்கிக்கொண்ட சம்பவத்தைப் போன்றே, இப்போது சென்சோ-20 குழுவினரும் விண்ணில் சிக்கிக்கொண்ட நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

