ஜோகன்னஸ்பர்க்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்க்கியா விலகியுள்ளார்.
இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ் தானில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டியில் இந்திய அணி, தனது லீக் ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடவுள்ளது. ஒருவேளை இந்திய அணி அரை இறுதி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறினால் அந்த ஆட்டங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.