குடியாத்தம்: குடியாத்தம் அடுத்த சின்னபரவக்கல் கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர் 20 பேர் தங்களது குலதெய்வத்திற்கு வழிபாடு நடத்த அங்குள்ள மலையோர பகுதிக்கு நேற்று பகல் 11.30 மணியளவில் சென்றனர். அங்குள்ள மரத்தடியில் கற்பூரம், ஊதுபத்தி ஏற்றி வைத்து சாம்பிராணி புகை போட்டுள்ளனர். இந்த புகையினால் மரத்தின் உச்சியில் இருந்த தேனீக்கள் கூட்டம் திடீரென பறந்து வந்தது. குடும்பத்தினர் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனால் தேனீக்கள் விடாமல் விரட்டி விரட்டி கொட்டியது. இதில் செந்தில்குமார்(40) என்பவர் இறந்தார். 12 பேர் படுகாயமடைந்தனர்.
The post சாம்பிராணி புகையால் தேனீக்கள் விரட்டி கொட்டியதில் ஒருவர் பலி appeared first on Dinakaran.