மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் அணியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இணையப் போவதாக வந்துள்ள செய்திகளை ராஜஸ்தான் நிர்வாகம் மறுத்துள்ளது.
கடந்த மே மாதம் முடிவடைந்த 18-வது ஐபிஎல் தொடரில், பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9-வது இடத்தை பிடித்து வெளியேறியது. மேலும் இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் காயம் காரணமாக சஞ்சு சாம்சன் பங்கேற்க முடியவில்லை.