சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் 23-ம் தேதி சம பலம் பொருந்திய மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (19-ம் தேதி) காலை 10.15 மணிக்கு www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் தொடங்கும் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட்டின் விலை ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.