திரையரங்குகளில் அல்லாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது ‘டெஸ்ட்’ திரைப்படம்.
சில மாதங்களுக்கு முன்பே அனைத்து பணிகளும் முடிவுற்று வெளியீட்டுக்கு தயாராகவுள்ள படம் ‘டெஸ்ட்’. இதன் சிறு டீஸர் மட்டுமே வெளியாகி இருந்தது. தற்போது படத்தின் டீஸர் ஒன்றை வெளியிட்டு, இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். இதன் உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இதன் வெளியீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.