சென்னை: மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டுக் குழுவின் தலைவராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நியமனம் செய்துள்ளார். சமூகநீதி, சமூக நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி வன்னியர் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு வரும் மே 11-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை ஒருங்கிணைத்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மாநாட்டுக்குழு தலைவராக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நியமிக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாசு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
The post சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டுக் குழுவின் தலைவராக அன்புமணி இராமதாஸ் நியமனம் appeared first on Dinakaran.