சென்னை: சென்னையில் இயங்கி வரும் ஐடி நிறுவனம் ஒன்றில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு கார், பைக் மற்றும் தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. கரோனா தொற்று பரவலுக்கு பிறகு உலகின் பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் சூழலில் இந்த ஐடி நிறுவனத்தின் முயற்சி ஊழியர்களுக்கு ஊக்கம் தரும் விதமாக அமைந்துள்ளது.
சென்னை – ஈக்காட்டுதாங்கலில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது ஜெனோவெக்ஸ் டெக்னாலஜிஸ் (Xenovex) என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம். இந்த நிறுவனத்தில் சுமார் 250 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.