நடிகர் சோனு சூட், கரோனா காலத்தில் செய்த உதவிகள் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். படப்பிடிப்பு ஒன்றுக்காகச் சென்னை வந்துள்ள அவர், சாலையோர இளநீர் வியாபாரியிடம் நலம் விசாரிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், நீலகண்டன், ராணி, வாசுதேவன் என இளநீர் வியாபாரம் செய்பவர்களின் பெயர்களைச் சொல்லும் சோனு சூட், தமிழில் ‘நல்லாயிருக்கீங்களா?’ என்று விசாரிக்கிறார். பின்னர் சென்னை மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் அமைப்புசாரா துறையைச் சேர்ந்த வணிகர்களையும் சிறு வணிகர்களையும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.