சிவகங்கை: சிவகங்கையில் மகன் காதுகுத்து விழாவில் மகனின் ஆசைக்காக தந்தையும் காது குத்திக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மதுரை முக்கு பகுதியை சேர்ந்தவர்கள் சேகர் – செல்வராணி தம்பதி. மகன் விஸ்வநாதன் (10). சேகர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். செல்வராணி சிவகங்கை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். மகன் விஸ்வநாதனுக்கு காதணி விழா நடத்த முடிவு செய்ததையடுத்து சேகர் சொந்த ஊர் திரும்பினார். நேற்று முன்தினம் சிவகங்கை தனியார் மண்டபத்தில் காதணி விழா நடைபெற்றது.
விழாவின்போது, ‘‘அப்பாவுக்கும் என்னைப் போலவே காது குத்த வேண்டும்’’ என விஸ்வநாதன் அடம் பிடித்துள்ளார். மகனின் பாச வேண்டுகோளை தட்டமுடியாத சேகர், அதே மேடையில் மகனுக்காக காது குத்திக் கொண்டு தோடு அணிந்து கொண்டார். மகனின் ஆசைக்காக தந்தையும் 2வது முறையாக காது குத்திக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
The post சிவகங்கையில் ருசிகர சம்பவம் ‘எனக்கு காது குத்துனீங்கள்ல… எங்க அப்பாவுக்கும் குத்துங்க..’மகனின் ஆசையை ‘காது கொடுத்து’ நிறைவேற்றிய தந்தை appeared first on Dinakaran.