பஞ்சாபின் ஹோசியார்பூர் பகுதியில் வெடிக்காத ஏவுகணை ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து பாஜக.,வின் ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘சீனாவின் பிஎல்-15 ரக ஏவுகணை பஞ்சாபின் ஹோசியார்பூரில் மீட்கப்பட்டுள்ளது.
இது பாகிஸ்தான் விமானப்படைக்கு சீனா வழங்கிய ஜே.எப்-17 ரக போர் விமானத்தில் இருந்து வீசப்பட்ட தொலை தூர ஏவுகணையாக இருக்கலாம். இது வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணை குறித்து ஆய்வு நடத்தப்படும் என தெரிகிறது.