பிரபுதேவா, லட்சுமி மேனன், ஆர்ஜே பாலாஜி, தங்கர்பச்சான் என பலர் நடித்துள்ள படம் ‘யங் மங் சங்’. ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ள இந்தப் படத்தை வாசன் விஷுவல் வென்சர்ஸ் தயாரித்துள்ளது. இதன் பெரும்பாலான காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளன.
“17-ம் நூற்றாண்டில் தொடங்கி, 1980-ல் நடப்பது போல இதன் கதை அமைக்கப் பட்டுள் ளது. இந்தியாவில் இருந்து சீனா செல்லும் மூன்று இளைஞர்கள், அங்கு பிரபலமான குங்ஃபூ கலையை கற்கிறார்கள். பிறகு ‘யங் மங் சங்’ என்ற பெயரோடு தமிழ் நாட்டுக்குத் திரும்புகிறார்கள். அதை வைத்து இங்கு என்னென்ன செய்கிறார்கள் என்பது திரைக்கதை” என படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் கோடையில் வெளியாக இருக்கிறது