செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனத்தின் ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 515 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை அமையந்துள்ளது. பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் 33 இடங்களில் தனது உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலை நகரில் ஒரு உற்பத்தி மையத்தினை நிறுவியுள்ள இந்நிறுவனம். மேம்பட்ட உற்பத்தி மையத்தின் ஒரு சிறப்புமிக்க நிறுவனம் என்பதை இலக்காகக்கொண்டு திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில், 515 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சோப்புகள், முகஅழகு க்ரீம்கள். தலைமுடி பராமரிப்பு சாதனங்கள் மற்றும் கொசு ஒழிப்பான் போன்றவற்றிற்கு ஒரு உற்பத்தி மையத்தை நிறுவ உள்ளது.
இந்த திட்டத்தில், 50 சதவிகிதம் அளவிற்கு பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும். மேலும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை நிறுவுவதற்கு, தமிழ்நாடு அரசிற்கும் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தானது.
பின்னர் முதலமைச்சர் பேசியதாவது: 2024 ஜனவரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு அடிக்கல் நாட்டிய ஒரே ஆண்டில் ஆலை உற்பத்தியை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் நுகர்வோர் பொருட்கள் சந்தை வாய்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பெரும்பாலான முக்கியமான நிறுவனங்களுக்கு தமிழ்நாடு சந்தையாக உள்ளது. இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது. தெற்காசியாவிலேயே முதலீடு மேற்கொள்ள சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான்.
ஆட்சி பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பெறும் முதலீடுகளை ஈர்த்துள்ளோம். தமிழ்நாடு வளர்சசி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய சமூக நிதியை உள்ளடக்கிய வளர்ச்சியை கொண்டது. 50 விழுக்காடு அளவுக்கு , பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மைக்கு நிகராக தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. முதலீடுகளுக்கான முதல் முகவரியாக தமிழ்நாடு விளங்குகிறது . உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முகவரி என்று முதல்வர் கூறியுள்ளார்.
The post செங்கல்பட்டு மாவட்டத்தில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனத்தின் ஆலையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.