
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் கடந்த ஜனவரி 26ம் தேதியே தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ”கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் முஜம்மிலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஆய்வு செய்து வருகிறோம். குறிப்பாக, அவர் தாக்குதலுக்கு முன்பு யாருடன் தொடர்பு கொண்டார் என்பதை ஆய்வு செய்தோம்.

