
புதுடெல்லி: டெல்லி – செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை (நவ.12) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் என அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விசாரணை விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

