சென்னை: சென்னையின் வளர்ந்த தொழில்நுட்பங்கள் வடகிழக்கு மாநிலங்களையும் சென்றடைய வேண்டும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், வடகிழக்கு வர்த்தகம் மற்றும்முதலீடு தொடர்பான மாநாடு, சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் முதலீடுகள் செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலீடுகள் தொடர்பாக எடுத்துரைத்தார்.