சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையாக காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் 1,000 பேருக்கு மஞ்சப்பை இன்று வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி சார்பில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுகாதாரக்கேடுகள் மற்றும் குப்பைகளை வகைப்பிரித்தல் குறித்த விழிப்புணர்வு முகாம், காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இம்முகாமில் மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் பங்கேற்று, மாணவ மாணவிகளுக்கு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்தும் விளக்கினார்.