சென்னை: திமுக மாணவர் அணிச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி ேநற்று வெளியிட்ட அறிவிப்பு: நீலகிரியில் நடந்த மாணவர் அணியை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைத் தொடர்ந்து, “மண்டல வாரியாக மாவட்ட அமைப்பாளர்கள்-துணை அமைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் வரும் 17ம் தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் தமிழ் கா.அமுதரசன் முன்னிலையில் சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலை, “அன்பகத்தில்” ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. இதில் சென்னை கிழக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை வடக்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு, சென்னை தென்மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய, காஞ்சிபுரம் வடக்கு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள்- துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
18ம் தேதி காலை 9.30 மணிக்கு மாணவர் அணி மாநில துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், தமிழ் கா.அமுதரசன். பி.எம்.ஆனந்த், ஜெ.வீரமணி ஆகியோர் முன்னிலையில் தஞ்சை மத்திய மாவட்டக் கழக அலுவலகமான “கலைஞர் அறிவாலயத்தில்” திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, திருச்சி மத்திய, புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, தஞ்சாவூர் மத்திய, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள்- துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்ளும் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.
ஆய்வுக் கூட்டத்தில் அந்தந்த மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, மாநகர மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சென்னையில் நாளையும், திருச்சியில் நாளை மறுநாளும் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் கூட்டம்: திமுக மாணவர் அணி செயலாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.