சென்னை: பிரேசில லெஜண்ட்ஸ் – இந்தியா ஆல் ஸ்டார் அணிகள் மோதும் கால்பந்து போட்டி வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு ஃபுட்பால் பிளஸ் அகாடமி ஏற்பாடு செய்துள்ளது. பிரேசில் லெஜண்ட்ஸ் கால்பந்து அணியில் 2002-ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பை தொடரை வென்ற ரொனால்டினோ, ரிவால்டோ, கஃபு, கில்பெர்டோ சில்வா, எட்மில்சன், கிளெபர்சன், ரிக்கார்டோ ஒலிவேரா, ககாபா, கமண்டுகாயா, எலிவெல்டன், பாலோ செர்ஜியோ, ஹியூரெல்ஹோ கோம்ஸ், டியாகோ கில், ஜோர்ஜின்ஹோ, அமரல், லூசியோ, அலெக்ஸ் ஃபெரோ, ஜியோவானி, வயோலா மார்செலோ உள்ளிட்டோர் இடம் பெறுகின்றனர்.
இந்தியா ஆல் ஸ்டார் அணி முன்னாள் பயிற்சியாளர் பிரசந்தா பானர்ஜி தலைமையில் களமிறங்குகிறது. இந்த அணியில் மெஹ்தாப் ஹொசைன், அல்விடோ டி’குன்ஹா, சையத் ரஹீம் நபி, சுபாசிஷ் ராய் சவுத்ரி, மெஹ்ராஜூதின் வாடூ, சண்முகம் வெங்கடேஷ், அர்னாப் மொண்டல், மகேஷ் கவ்லி உள்ளிட்டோர் விளையாட உள்ளனர். இந்த போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு புக்மைஷோ இணையதளத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.