சென்னை: குடியரசு தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வரும் 20, 22, 24 (ஒத்திகை நாட்கள்) மற்றும் 26ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்நாட்களில் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.