சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் கடந்த 2023 மே 23ம் தேதி நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், இந்த 4 கூடுதல் நீதிபதிகளையும் நிரந்தரம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்களோடு சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 60 நிரந்தர நீதிபதிகள் உள்ளனர். இன்னும் 5 நீதிபதிகள் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வருகிறார்கள்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 75 ஆகும். தற்போது, 65 நீதிபதிகளே உள்ளனர். இன்னும் 10 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி இடங்களை நிரப்புவதற்கான பணிகளை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அடங்கிய கொலீஜியம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ள பட்டியல் இன்னும் ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 4 பேர் நிரந்தரம்: உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவு appeared first on Dinakaran.