சென்னை: மிகச்சிறப்பான முறையில் எவ்வித தண்டனைகளும் இன்றி மெச்சத்தகுந்த வகையில், 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருபவர்களுக்கு அதி உத்கிரிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்படுகிறது. சிறப்பான முறையில் எவ்வித தண்டனைகளுமின்றி மெச்சத்தகுந்த வகையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருபவர்களுக்கு உத்கிரிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்படுகிறது.
இதன்அடிப்படையில், சென்னை காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்பேரில், சென்னை காவல் துறையில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து வருபவர்கள், பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் என 73 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு 2020 மற்றும் 2021-ம் ஆண்டிற்கான அதி உத்கிரிஷ்ட் சேவா பதக்கம் (மிகச்சிறப்பான சேவைக்கான பதக்கம்) மற்றும் உத்கிரிஷ்ட் சேவா பதக்கம் (சிறப்பான சேவைக்கான பதக்கம்) நேற்று காலை, ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், கூடுதல் காவல் ஆணையாளர் கபில்குமார் சி.சரட்கர், வழங்கினார்.
The post சென்னை காவல்துறையில் ஓய்வு பெற்ற 73 காவல் அதிகாரிகளுக்கு அதி உத்கிரிஷ்ட் சேவா பதக்கம் appeared first on Dinakaran.